பல மாதங்களாக லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாததால், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர் மற்றும் விற்பனை முகவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்டகாலமாக விநியோகம் இல்லாததால், லாஃப் எரிவாயுவைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த குடும்பங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் எரிவாயு விற்பனை முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், லாஃப் எரிவாயு நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அரசாங்கம் பொறுப்பேற்று, லிட்ரோ எரிவாயு நிறுவனத்துடன் இணைந்து தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, வர்த்தக மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புகளையும் வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் இந்த எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே தற்போது நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் லாஃப் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு பல மாதங்களாக லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாததால், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர் மற்றும் விற்பனை முகவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.நீண்டகாலமாக விநியோகம் இல்லாததால், லாஃப் எரிவாயுவைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த குடும்பங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் எரிவாயு விற்பனை முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், லாஃப் எரிவாயு நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அரசாங்கம் பொறுப்பேற்று, லிட்ரோ எரிவாயு நிறுவனத்துடன் இணைந்து தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.எனவே, வர்த்தக மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புகளையும் வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் இந்த எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே தற்போது நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.