பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லுருவ பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 23 கணினிகள் மற்றும் அவற்றின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த விடுதியில் இணையத்தளம் ஊடாக சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட சோதனைக் கட்டளைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு நடவடிக்கையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, குற்றப் பதிவுப் பிரிவு, பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் ஆகியன இணைந்து செயற்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த விடுதியில் தங்கியிருந்த 32 சீனப் பிரஜைகள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில், அவர்களின் பொறுப்பிலிருந்த 23 கணினிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், குறித்த கணினிகள் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
32 சீனப் பிரஜைகள் தங்கியிருந்த விடுதியில் அதிரடிச் சோதனை – சிக்கிய 23 கணினிகள் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லுருவ பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 23 கணினிகள் மற்றும் அவற்றின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறித்த விடுதியில் இணையத்தளம் ஊடாக சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 7ஆம் திகதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட சோதனைக் கட்டளைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தக் கூட்டு நடவடிக்கையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, குற்றப் பதிவுப் பிரிவு, பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் ஆகியன இணைந்து செயற்பட்டுள்ளன.இதன்போது, குறித்த விடுதியில் தங்கியிருந்த 32 சீனப் பிரஜைகள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில், அவர்களின் பொறுப்பிலிருந்த 23 கணினிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.பின்னர், குறித்த கணினிகள் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.