• Oct 31 2026

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு – விசாரணை ஆரம்பம்!

Chithra / Oct 30th 2026, 12:28 pm
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள ஐந்து காணிகளை 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு – விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள ஐந்து காணிகளை 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement