• Jun 04 2026

குவைத் விமான நிலையம் குறிவைப்பு; இந்தியர் பலி! இலங்கையர்கள் உட்பட 60 பேர் காயம்!

Chithra / Jun 4th 2026, 7:45 am
image

வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி டிரோன் (Drone) தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மின் தூக்கி (Elevator) பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றி வந்த மூன்று இலங்கை ஆண்களே இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர். 


அவர்கள் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், தற்போது சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இத்தாக்குதலில் உயிரிழந்த நபர் இந்தியக் குடிமகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"குவைத் விமான நிலையத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, பல இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை இருதரப்பும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.


இந்தத் தாக்குதலை "ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என்று குவைத் பாதுகாப்பு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. குவைத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.


இத்தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பொறுப்பேற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே, குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

குவைத் விமான நிலையம் குறிவைப்பு; இந்தியர் பலி இலங்கையர்கள் உட்பட 60 பேர் காயம் வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி டிரோன் (Drone) தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மின் தூக்கி (Elevator) பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றி வந்த மூன்று இலங்கை ஆண்களே இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், தற்போது சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.இத்தாக்குதலில் உயிரிழந்த நபர் இந்தியக் குடிமகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குவைத் விமான நிலையத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, பல இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை இருதரப்பும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலை "ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என்று குவைத் பாதுகாப்பு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. குவைத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.இத்தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பொறுப்பேற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே, குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement