• Jul 21 2026

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு: நீர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Chithra / Jul 20th 2026, 10:05 am
image


நாட்டின் நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44 முதல் 45 சதவீதம் வரையிலேயே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 


மேலும், ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


'எல் நினோ' காலநிலை தாக்கத்துக்கு மத்தியில், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், எதிர்பார்த்தபடி மழை பெய்யாத பட்சத்தில், தற்போதுள்ள நீர்வளத்தை பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கும் வகையில் மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் வரையிலான மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததாகவும் எல். எஸ். சூரியபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால், நாட்டின் நீர்வளத்தை பாதுகாக்கவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நீரையும் மின்சாரத்தையும் அனைவரும் பொறுப்புடன் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு: நீர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை நாட்டின் நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44 முதல் 45 சதவீதம் வரையிலேயே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.'எல் நினோ' காலநிலை தாக்கத்துக்கு மத்தியில், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், எதிர்பார்த்தபடி மழை பெய்யாத பட்சத்தில், தற்போதுள்ள நீர்வளத்தை பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கும் வகையில் மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் வரையிலான மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததாகவும் எல். எஸ். சூரியபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், நாட்டின் நீர்வளத்தை பாதுகாக்கவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நீரையும் மின்சாரத்தையும் அனைவரும் பொறுப்புடன் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement