• Jul 21 2026

கொழும்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

Chithra / Jul 20th 2026, 9:24 am
image


கொழும்பு - பம்பலபிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவரின் உடல் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கொழும்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு கொழும்பு - பம்பலபிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் உடல் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement