சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக ஆஜர்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட முக்கிய புள்ளிகள் - பரபரப்பில் கொழும்பு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக ஆஜர்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இதேவேளை விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார். 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது