• Oct 04 2026

78 உயிரிழப்பு, ஒரு இலட்சம் பாதிப்பு...! இலங்கையில் அதிஅபாய வலயங்கள் எவை?

Chithra / Oct 4th 2026, 2:56 pm
image


இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாடு முழுவதும் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.077 சதவீதமாக பதிவாகியுள்ளது.


மொத்த நோயாளர்களில் 52.45 சதவீதமான 52,906 பேர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.


மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 21,377 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


கொழும்பு மாவட்டத்தில் 19,759 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,689 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,400 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மாதாந்திர தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,230 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


இதேவேளை, இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


மேலும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தற்போது நாடு முழுவதும் 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதனால், டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

78 உயிரிழப்பு, ஒரு இலட்சம் பாதிப்பு. இலங்கையில் அதிஅபாய வலயங்கள் எவை இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாடு முழுவதும் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.077 சதவீதமாக பதிவாகியுள்ளது.மொத்த நோயாளர்களில் 52.45 சதவீதமான 52,906 பேர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 21,377 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 19,759 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,689 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,400 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாதாந்திர தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,230 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இதேவேளை, இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.மேலும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது நாடு முழுவதும் 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இதனால், டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement