திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் அமைந்துள்ள நிஸ்கோ வீதி, பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி சேதமடைந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நிஸ்கோ வீதியை புனரமைத்துத் தருமாறு பல தடவைகள் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பிரதேச சபையினால் பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், நிஸ்கோ வீதியையும் புனரமைப்புப் பணிகளுக்குள் உள்ளடக்கி, விரைவில் புனரமைப்புச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரின் நிஸ்கோ வீதியை புனரமைக்க கோரிக்கை திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் அமைந்துள்ள நிஸ்கோ வீதி, பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வீதி சேதமடைந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.நிஸ்கோ வீதியை புனரமைத்துத் தருமாறு பல தடவைகள் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், தற்போது பிரதேச சபையினால் பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், நிஸ்கோ வீதியையும் புனரமைப்புப் பணிகளுக்குள் உள்ளடக்கி, விரைவில் புனரமைப்புச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.