• Nov 17 2026

அஸ்வெசும பணம் எப்போது கிடைக்கும்? புதிய பயனாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

Chithra / Nov 17th 2026, 3:25 pm
image


புதிய மற்றும் இரண்டாம் கட்ட அஸ்வெசும பயனாளர்களுக்கான நவம்பர் மாத நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி கடந்த நவம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பயனாளர்கள் இன்று (17) முதல் வங்கிக் கணக்குகளைத் திறந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்கள் தங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரச வங்கியொன்றில் விசேட சமூகப் பாதுகாப்பு நலன்புரிக் கணக்கொன்றைத் திறக்க வேண்டும்.


குறித்த கணக்கைத் திறப்பதற்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்கள் இன்று முதல் அந்தந்த பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன.


வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர், பயனாளர்கள் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.


மேலும், பயனாளர்களின் ஏனைய வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதி வழங்கும் சத்தியக்கடதாசியொன்றை அனைத்து நலன்புரிக் கொடுப்பனவுப் பயனாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சபை அறிவித்துள்ளது.


எனினும், ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாக மற்றுமொரு கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.


எனவே, கொடுப்பனவுகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்காகத் தேவையான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு தகுதியுடைய பயனாளர்களிடம் நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.


அஸ்வெசும பணம் எப்போது கிடைக்கும் புதிய பயனாளர்களுக்கு வெளியான அறிவிப்பு புதிய மற்றும் இரண்டாம் கட்ட அஸ்வெசும பயனாளர்களுக்கான நவம்பர் மாத நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி கடந்த நவம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பயனாளர்கள் இன்று (17) முதல் வங்கிக் கணக்குகளைத் திறந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்கள் தங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரச வங்கியொன்றில் விசேட சமூகப் பாதுகாப்பு நலன்புரிக் கணக்கொன்றைத் திறக்க வேண்டும்.குறித்த கணக்கைத் திறப்பதற்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்கள் இன்று முதல் அந்தந்த பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன.வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர், பயனாளர்கள் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.மேலும், பயனாளர்களின் ஏனைய வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதி வழங்கும் சத்தியக்கடதாசியொன்றை அனைத்து நலன்புரிக் கொடுப்பனவுப் பயனாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சபை அறிவித்துள்ளது.எனினும், ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாக மற்றுமொரு கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.எனவே, கொடுப்பனவுகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்காகத் தேவையான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு தகுதியுடைய பயனாளர்களிடம் நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement