• Oct 04 2026

கொண்ட ரஞ்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி - மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

gun
Chithra / Oct 4th 2026, 11:51 am
image


துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கொண்ட ரஞ்சி’ என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.


மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த துப்பாக்கி கணேமுல்ல, பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதைகுழியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


‘மினுவாங்கொட டொக்கா’ என்பவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலொன்றுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


விசாரணைகளின்போது, துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளார்.


அத்துடன், குறித்த துப்பாக்கியை ‘ரத்கம விதுர’ என்பவரே தமக்கு வழங்கியதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வருவதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ‘எல்டோ தர்மே’ என்பவரின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (03) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


இந்த சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொண்ட ரஞ்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி - மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கொண்ட ரஞ்சி’ என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த துப்பாக்கி கணேமுல்ல, பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதைகுழியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‘மினுவாங்கொட டொக்கா’ என்பவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலொன்றுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகளின்போது, துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளார்.அத்துடன், குறித்த துப்பாக்கியை ‘ரத்கம விதுர’ என்பவரே தமக்கு வழங்கியதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வருவதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ‘எல்டோ தர்மே’ என்பவரின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (03) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement