முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன்னிலையில் ஆஜராக வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆஜராகத் தவறினால், அவருக்கு எதிராக பயணத் தடை விதிக்கக் கோரப்படலாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷிராந்தி ராஜபக்ச தலைமை தாங்கிய ‘சிறிலியா’ (Siriliya) நிறுவனம் தொடர்பான விசாரணைக்காக FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகத் தவறினால், பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக பயணத் தடை உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டால், அவர் நாட்டுக்குத் திரும்பும் சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம்.
ஷிராந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.
இதனையடுத்து, செப்டம்பர் 24ஆம் திகதி FCID முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவித்து விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அவர் நாடு திரும்புவதற்கான உத்தேச திகதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், நாடு திரும்பும் திகதி அவரது மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ச வெளிநாட்டில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராவாரா என்பது அடுத்த கட்டத்தில் முக்கியத்துவம் பெறும் விடயமாகியுள்ளது.
காலக்கெடு முடிந்தால் ஷிராந்திக்கு அடுத்தது என்ன விமான நிலையத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன்னிலையில் ஆஜராக வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆஜராகத் தவறினால், அவருக்கு எதிராக பயணத் தடை விதிக்கக் கோரப்படலாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஷிராந்தி ராஜபக்ச தலைமை தாங்கிய ‘சிறிலியா’ (Siriliya) நிறுவனம் தொடர்பான விசாரணைக்காக FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகத் தவறினால், பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக பயணத் தடை உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டால், அவர் நாட்டுக்குத் திரும்பும் சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம்.ஷிராந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.இதனையடுத்து, செப்டம்பர் 24ஆம் திகதி FCID முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவித்து விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.இதேவேளை, அவர் நாடு திரும்புவதற்கான உத்தேச திகதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும், அவர் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், நாடு திரும்பும் திகதி அவரது மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஷிராந்தி ராஜபக்ச வெளிநாட்டில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராவாரா என்பது அடுத்த கட்டத்தில் முக்கியத்துவம் பெறும் விடயமாகியுள்ளது.