அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவனுக்கு காலை வேளையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் ,குறித்த மாணவன் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதில் சிறு காயங்களுக்கு உள்ளான மாணவன், பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறையில் அதிகாலை பரபரப்பு; சைக்கிளில் சென்ற மாணவனுக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம் அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவனுக்கு காலை வேளையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் ,குறித்த மாணவன் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இதில் சிறு காயங்களுக்கு உள்ளான மாணவன், பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.