• Oct 02 2026

வாரத்தில் 3 நாட்கள்... மீண்டும் ஆரம்பமான திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை

Chithra / Oct 2nd 2026, 11:54 am
image

 

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமான சேவைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் குறித்த சேவை இடைநிறுத்தப்பட்டது.


இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நேற்று (01) முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.


இந்த விமானப் பயணத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களுக்குள் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.


மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நாளான நேற்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு சென்ற விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணித்துள்ளனர்.


திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இரு பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை இலகுவாக்கும் எனவும், இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 3 நாட்கள். மீண்டும் ஆரம்பமான திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை  திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமான சேவைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் குறித்த சேவை இடைநிறுத்தப்பட்டது.இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நேற்று (01) முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.இந்த விமானப் பயணத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களுக்குள் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நாளான நேற்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு சென்ற விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணித்துள்ளனர்.திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இரு பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை இலகுவாக்கும் எனவும், இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement