• Oct 06 2026

மீண்டும் எரிபொருள் வரிசைகள் — தனியார் நிறுவனங்களுக்கு இன்று செல்லும் கடும் உத்தரவு

Chithra / Oct 6th 2026, 11:03 am
image


நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி முன்னெடுக்குமாறு தனியார் விநியோக நிறுவனங்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

இந்த அறிவுறுத்தல் அமைச்சின் செயலாளரால் இன்று வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், கொள்வனவு விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் நட்டம் ஏற்படுவதாகக் கூறி சில தனியார் நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக அவற்றின் கீழ் இயங்கும் சில எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.


எனினும், நாடு முழுவதுமான எரிபொருள் கையிருப்பு தட்டுப்பாடு இல்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை கட்டாயமாக பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும், தற்போதைய நிலைமையை சமாளிக்கும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான நிலையங்களுக்கு அதிகளவு எரிபொருளை விநியோகிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பில் நாளை ஜனாதிபதி, வலுசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. 

மீண்டும் எரிபொருள் வரிசைகள் — தனியார் நிறுவனங்களுக்கு இன்று செல்லும் கடும் உத்தரவு நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி முன்னெடுக்குமாறு தனியார் விநியோக நிறுவனங்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த அறிவுறுத்தல் அமைச்சின் செயலாளரால் இன்று வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், கொள்வனவு விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் நட்டம் ஏற்படுவதாகக் கூறி சில தனியார் நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அவற்றின் கீழ் இயங்கும் சில எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.எனினும், நாடு முழுவதுமான எரிபொருள் கையிருப்பு தட்டுப்பாடு இல்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை கட்டாயமாக பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், தற்போதைய நிலைமையை சமாளிக்கும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான நிலையங்களுக்கு அதிகளவு எரிபொருளை விநியோகிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பில் நாளை ஜனாதிபதி, வலுசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement