• Oct 05 2026

திலீபன் சிலை விவகாரம்: முன்னிலையான முக்கியஸ்தர்கள்! யாழ். பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன?

Chithra / Oct 5th 2026, 10:37 am
image


நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இருவர் இன்று (5) காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.


தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோரே இன்று  பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.


அவர்கள் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணனுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளனர்.


நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை கடந்த 27ஆம் திகதி அதிகாலை பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தது.


இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதன் அடிப்படையில், தியாக தீபம் நினைவேந்தல் கட்டமைப்பைச் சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபம் ஆவணக் காப்பக செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.


இந்நிலையிலேயே, அவர்களில் வரதராஜா பார்த்தீபன் மற்றும் ப. மயூரன் ஆகியோர் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

திலீபன் சிலை விவகாரம்: முன்னிலையான முக்கியஸ்தர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இருவர் இன்று (5) காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோரே இன்று  பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.அவர்கள் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணனுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளனர்.நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை கடந்த 27ஆம் திகதி அதிகாலை பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தது.இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் அடிப்படையில், தியாக தீபம் நினைவேந்தல் கட்டமைப்பைச் சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபம் ஆவணக் காப்பக செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.இந்நிலையிலேயே, அவர்களில் வரதராஜா பார்த்தீபன் மற்றும் ப. மயூரன் ஆகியோர் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement