இலங்கை கராத்தே சங்கத்தில் நடக்கும் பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்துக் கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜப்பானிய கராத்தே தோ ஹகுஅகாய் அமைப்பின் முதன்மை ஆலோசகர் கசுன் விஜேகோன், ஊழல்களை விசாரிப்பதற்காகக் கடந்த 2025 ஆகஸ்டில் கலைக்கப்பட்ட கராத்தே சங்கத்திற்கு, இந்தாண்டு பிப்ரவரியில் தம்மிக கஸ்தூரிமுத்தலி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
ஆனால், அவர் பொறுப்பேற்றது முதல் மற்ற உறுப்பினர்களை மதிக்காமல் தனிச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே மீண்டும் பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஆசிய கராத்தே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இணையதளத்தில் வெளியிடப்படாத போலிச் சுற்றறிக்கைகள் மூலம், அரசு நிதியுதவியுடன் போட்டி நடப்பதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனை நம்பி ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன்வந்த பின்னர், 'அரசு நிதி கிடையாது, சொந்த செலவிலேயே செல்ல வேண்டும்' என சங்கத் தலைவர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.
இப்போட்டிக்குச் செல்லும் ஒரு பிள்ளையிடம் ஐந்து இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் சாடிய அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்குத் துணைபோகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், நாட்டின் தலைவர் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பில் பேசிய கராத்தே சங்க உறுப்பினர் அதுல ஜயசிங்க, அமைச்சரையும் மீறித் தற்போதைய தலைவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சங்கத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி, சட்டவிரோதமாகப் பணத்தைச் சுருட்ட ஒரு கும்பல் தலைவரைத் தவறான வழிக்கு இட்டுச் சென்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டுத்துறைச் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படும் இந்த ஊழல் கும்பலிடமிருந்து கராத்தே சங்கத்தைக் காப்பாற்றத் தலைவரே நேரில் தலையிட்டு எமக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
கராத்தே சங்கம் சீரழிவு; அமைச்சர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டு இலங்கை கராத்தே சங்கத்தில் நடக்கும் பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்துக் கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜப்பானிய கராத்தே தோ ஹகுஅகாய் அமைப்பின் முதன்மை ஆலோசகர் கசுன் விஜேகோன், ஊழல்களை விசாரிப்பதற்காகக் கடந்த 2025 ஆகஸ்டில் கலைக்கப்பட்ட கராத்தே சங்கத்திற்கு, இந்தாண்டு பிப்ரவரியில் தம்மிக கஸ்தூரிமுத்தலி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தார். ஆனால், அவர் பொறுப்பேற்றது முதல் மற்ற உறுப்பினர்களை மதிக்காமல் தனிச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே மீண்டும் பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.மேலும், ஆசிய கராத்தே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இணையதளத்தில் வெளியிடப்படாத போலிச் சுற்றறிக்கைகள் மூலம், அரசு நிதியுதவியுடன் போட்டி நடப்பதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை நம்பி ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன்வந்த பின்னர், 'அரசு நிதி கிடையாது, சொந்த செலவிலேயே செல்ல வேண்டும்' என சங்கத் தலைவர் அறிவித்துள்ளதாகக் கூறினார். இப்போட்டிக்குச் செல்லும் ஒரு பிள்ளையிடம் ஐந்து இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் சாடிய அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்குத் துணைபோகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், நாட்டின் தலைவர் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இந்தச் சந்திப்பில் பேசிய கராத்தே சங்க உறுப்பினர் அதுல ஜயசிங்க, அமைச்சரையும் மீறித் தற்போதைய தலைவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சங்கத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி, சட்டவிரோதமாகப் பணத்தைச் சுருட்ட ஒரு கும்பல் தலைவரைத் தவறான வழிக்கு இட்டுச் சென்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டுத்துறைச் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படும் இந்த ஊழல் கும்பலிடமிருந்து கராத்தே சங்கத்தைக் காப்பாற்றத் தலைவரே நேரில் தலையிட்டு எமக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.