நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் அதன் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டு வருகின்றது.
கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரு வகையான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிலிண்டர்களைப் பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், நீண்ட நேரம் காத்திருந்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், சிலர் முன்கூட்டியே சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முயற்சிப்பதும் தேவையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாகத் தீர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர்களை ஏற்றிவரும் லொறிகள் கடந்த சில நாட்களாக வருகை தரவில்லை எனவும், இதனால் புதிய சிலிண்டர்களை நுகர்வோருக்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு விநியோகத்தை விரைவாகச் சீரமைத்து, தாம் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அம்பாறை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடா மணிக்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் அதன் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டு வருகின்றது.கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறிப்பாக, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரு வகையான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிலிண்டர்களைப் பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், நீண்ட நேரம் காத்திருந்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், சிலர் முன்கூட்டியே சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முயற்சிப்பதும் தேவையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாகத் தீர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.சமையல் எரிவாயு நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர்களை ஏற்றிவரும் லொறிகள் கடந்த சில நாட்களாக வருகை தரவில்லை எனவும், இதனால் புதிய சிலிண்டர்களை நுகர்வோருக்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், சமையல் எரிவாயு விநியோகத்தை விரைவாகச் சீரமைத்து, தாம் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அம்பாறை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.