• Oct 20 2026

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகளா? விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு!

Chithra / Oct 20th 2026, 3:55 pm
image


இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளின்போது இடம்பெற்றிருக்கக்கூடிய முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே, அதன் செயற்பாடுகளைத் தொடர்வதற்காக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஏதேனும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயற்பாடுகள் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.


இந்நிலையில், ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதன் மூலம், குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகளா விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளின்போது இடம்பெற்றிருக்கக்கூடிய முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே, அதன் செயற்பாடுகளைத் தொடர்வதற்காக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஏதேனும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயற்பாடுகள் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.இந்நிலையில், ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதன் மூலம், குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement