கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த மழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முஹம்மது இப்புனுள்ளா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினராவார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மீன் வியாபாரம் செய்து வந்த முஹம்மது இப்புனுள்ளா, இன்று காலை கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார்.
அப்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலையே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழையால் விபரீதம்; விபத்தில் பலியான கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலத்த மழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முஹம்மது இப்புனுள்ளா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினராவார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,மீன் வியாபாரம் செய்து வந்த முஹம்மது இப்புனுள்ளா, இன்று காலை கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். அப்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலையே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.