• Apr 20 2026

கனமழையால் விபரீதம்; விபத்தில் பலியான கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்

Chithra / Nov 27th 2025, 10:58 am
image


​கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பலத்த மழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


​உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முஹம்மது இப்புனுள்ளா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினராவார்.


​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


​மீன் வியாபாரம் செய்து வந்த முஹம்மது இப்புனுள்ளா, இன்று காலை கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். 


அப்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


​கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலையே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் விபரீதம்; விபத்தில் பலியான கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ​கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலத்த மழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.​உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முஹம்மது இப்புனுள்ளா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினராவார்.​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,​மீன் வியாபாரம் செய்து வந்த முஹம்மது இப்புனுள்ளா, இன்று காலை கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். அப்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.​கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலையே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement