• Oct 18 2026

மடு தேவாலயத்திற்குச் சென்ற நால்வருக்கு வழியில் நடந்த சோகம்; தூக்கக்கலக்கமே காரணமா?

Chithra / Oct 18th 2026, 4:34 pm
image


மன்னார், மடு பிரதான வீதியில் இன்று  இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.


இன்று அதிகாலை 5.45 மணியளவில் மடு தேவாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் காரில் மடு தேவாலயத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.


மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை அடைந்து, அங்கிருந்து மடு பிரதான வீதி வழியாக தேவாலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் திடீரென வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.


இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


எனினும், அவர்களில் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் 55 வயதுடைய சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அவரது சடலம் பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மடு தேவாலயத்திற்குச் சென்ற நால்வருக்கு வழியில் நடந்த சோகம்; தூக்கக்கலக்கமே காரணமா மன்னார், மடு பிரதான வீதியில் இன்று  இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 5.45 மணியளவில் மடு தேவாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் காரில் மடு தேவாலயத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை அடைந்து, அங்கிருந்து மடு பிரதான வீதி வழியாக தேவாலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் திடீரென வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.எனினும், அவர்களில் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 55 வயதுடைய சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரது சடலம் பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனிடையே, விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement