• Oct 18 2026

மீண்டும் மீண்டும் இருளில் மூழ்கும் இலங்கை – தேசிய மின் கட்டமைப்பில் பாரிய பலவீனம்! அரசிடம் அவசர கோரிக்கை!

Chithra / Oct 18th 2026, 11:40 am
image


தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.


நேற்று சனிக்கிழமை (17) ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நாடளாவிய மின்தடைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், அவை தேசிய மின் கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக, 2020, 2021, 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளிலும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.


இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது, நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


2025ஆம் ஆண்டு பாணந்துறை துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று மின் உபகரணங்களுடன் தொடர்பு கொண்டதால் நாடளாவிய மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இத்தகைய சம்பவமொன்று முழு நாட்டின் மின்சார விநியோகத்தையும் பாதிக்கும் நிலை காணப்படுவது, தேசிய மின் கட்டமைப்பின் பலவீனத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடளாவிய மின்தடைகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்தகைய நாடுகளின் மின்சார விநியோகத் தரநிலைகளை இலங்கையும் அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


தேசிய மின் கட்டமைப்பின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் எதிர்பாராத பாதிப்புகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நீண்டகால முதலீடுகள் அவசியம் என்றும் ராஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, தொடர்ச்சியாக ஏற்படும் மின்தடைகளைத் தனிப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாக மாத்திரம் கருதாமல், தேசிய மின் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் மீண்டும் இருளில் மூழ்கும் இலங்கை – தேசிய மின் கட்டமைப்பில் பாரிய பலவீனம் அரசிடம் அவசர கோரிக்கை தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.நேற்று சனிக்கிழமை (17) ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நாடளாவிய மின்தடைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், அவை தேசிய மின் கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, 2020, 2021, 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளிலும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது, நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.2025ஆம் ஆண்டு பாணந்துறை துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று மின் உபகரணங்களுடன் தொடர்பு கொண்டதால் நாடளாவிய மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இத்தகைய சம்பவமொன்று முழு நாட்டின் மின்சார விநியோகத்தையும் பாதிக்கும் நிலை காணப்படுவது, தேசிய மின் கட்டமைப்பின் பலவீனத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடளாவிய மின்தடைகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தகைய நாடுகளின் மின்சார விநியோகத் தரநிலைகளை இலங்கையும் அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.தேசிய மின் கட்டமைப்பின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் எதிர்பாராத பாதிப்புகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நீண்டகால முதலீடுகள் அவசியம் என்றும் ராஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, தொடர்ச்சியாக ஏற்படும் மின்தடைகளைத் தனிப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாக மாத்திரம் கருதாமல், தேசிய மின் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement