நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டும் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, 'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான வழக்கு கடந்த 16ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மருத்துவ அறிக்கை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், ஷிரந்தி ராஜபக்சவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தது.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ச, தற்போது மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஷிரந்தி ராஜபக்ச ஏன் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டும் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, 'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான வழக்கு கடந்த 16ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.மருத்துவ அறிக்கை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், ஷிரந்தி ராஜபக்சவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தது.மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.இவ்வாறான பின்னணியில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ச, தற்போது மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.