• May 05 2026

சாரதியின் நித்திரை கலக்கத்தால் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Chithra / Feb 24th 2026, 2:24 pm
image

 


நோட்டன்பிரிட்ஜ் - லக்ஷபான பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


சிவனொளிபாதமலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கி ஒரு குழுவினருடன் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்து லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், 

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 


விபத்தினால் காருக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்  நோட்டன்பிரிட்ஜ் - லக்ஷபான பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சிவனொளிபாதமலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கி ஒரு குழுவினருடன் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்து லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தினால் காருக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement