• Apr 22 2026

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது!

Chithra / Oct 23rd 2025, 7:36 am
image


யாழ்ப்பாணத்தில்  போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது யாழ்ப்பாணத்தில்  போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement