உலக குடியிருப்பு தினம் 2026-ஐ முன்னிட்டு, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.
“சொந்தமாக இருக்க ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் மன்னார், நானாட்டான், மடு மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு ஆரம்பம் – பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு உலக குடியிருப்பு தினம் 2026-ஐ முன்னிட்டு, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.“சொந்தமாக இருக்க ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் மன்னார், நானாட்டான், மடு மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.குறித்த நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.