• Nov 05 2026

கொழும்பில் 21 வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் மறைந்திருந்த ரகசியம் என்ன? சுற்றிவளைத்த பொலிஸார்

Chithra / Nov 3rd 2026, 12:05 pm
image


கொழும்பு, மருதானை பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த இணையவழி நிதி மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.


பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.


மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தில் சட்டவிரோத இணைய மோசடிகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.


இதன்போது, அங்கு தங்கியிருந்த 21 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களில் 12 சீனப் பிரஜைகளும், 6 பங்களாதேஷ் பிரஜைகளும், 3 இந்தியப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.


ஆனால், இந்தக் குழுவினர் முன்னெடுத்து வந்த மோசடிகளின் உண்மையான தன்மை என்ன? இதன் பின்னணியில் மேலும் யாராவது உள்ளனரா?

இந்தக் கோணங்களில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கொழும்பில் 21 வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் மறைந்திருந்த ரகசியம் என்ன சுற்றிவளைத்த பொலிஸார் கொழும்பு, மருதானை பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த இணையவழி நிதி மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தில் சட்டவிரோத இணைய மோசடிகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.இதன்போது, அங்கு தங்கியிருந்த 21 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 12 சீனப் பிரஜைகளும், 6 பங்களாதேஷ் பிரஜைகளும், 3 இந்தியப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.ஆனால், இந்தக் குழுவினர் முன்னெடுத்து வந்த மோசடிகளின் உண்மையான தன்மை என்ன இதன் பின்னணியில் மேலும் யாராவது உள்ளனராஇந்தக் கோணங்களில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement