வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது சபைக்குள் நுழைந்த சந்தேகநபர், அவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பிரதேச சபைக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி சிசிரிவியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சிசிரிவி காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை;பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது சபைக்குள் நுழைந்த சந்தேகநபர், அவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பிரதேச சபைக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி சிசிரிவியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிரிவி காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.