• May 14 2026

வவுனியாவில் கோர விபத்தில் நொறுங்கிய வாகனங்கள்; நால்வர் படுகாயம்

Chithra / Jan 27th 2026, 9:04 am
image

 

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் கூலர் ரக வாகனமும் ஜீப் ரக வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 


இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.


குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்  போது தெரியவந்துள்ளது.


மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் கோர விபத்தில் நொறுங்கிய வாகனங்கள்; நால்வர் படுகாயம்  வவுனியா - செட்டிகுளம் பகுதியில் கூலர் ரக வாகனமும் ஜீப் ரக வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்  போது தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement