• Jul 21 2026

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக வி.கோபிமுகுந்தன் பொறுப்பேற்பு!

shanu / Jul 20th 2026, 4:31 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ச.கிருசாந்தன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட செயலாளர் வெற்றிடத்திற்கு, புதிய செயலாளராக விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன் இன்றையதினம் (20.07.2026) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன், தனது புதிய பதவிக்கான கடமைகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் பொறுப்பேற்றார்.


புதிய செயலாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் , சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்து வரவேற்றிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக வி.கோபிமுகுந்தன் பொறுப்பேற்பு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ச.கிருசாந்தன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட செயலாளர் வெற்றிடத்திற்கு, புதிய செயலாளராக விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன் இன்றையதினம் (20.07.2026) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன், தனது புதிய பதவிக்கான கடமைகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் பொறுப்பேற்றார்.புதிய செயலாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் , சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்து வரவேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement