• Oct 24 2026

இலங்கைத் தமிழர் முகாமில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்; இளைஞன் பலி! இருவர் காயம்

Chithra / Oct 23rd 2026, 11:34 am
image


தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த முகாமில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,  பலர் அங்கு கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.


சம்பவத்தன்று வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்ட தொழிலாளர்கள், முகாமில் உள்ள ஓலைக்குடிசை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர்.


இதன்போது இரவு 10 மணியளவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் தங்கியிருந்த குடிசையின் மீது இடி தாக்கியுள்ளது.


இதில் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த 24 வயதுடைய முனியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


அவரது வயிறு, வலது விலா எலும்புப் பகுதி மற்றும் வலது தொடை ஆகிய இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், இந்தச் சம்பவத்தில் அவருடன் உறங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து (34) மற்றும் சுனில் (45) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.


எனினும், காயமடைந்த இருவரும் தற்போது இயல்பான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கைத் தமிழர் முகாமில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்; இளைஞன் பலி இருவர் காயம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த முகாமில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,  பலர் அங்கு கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.சம்பவத்தன்று வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்ட தொழிலாளர்கள், முகாமில் உள்ள ஓலைக்குடிசை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர்.இதன்போது இரவு 10 மணியளவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் தங்கியிருந்த குடிசையின் மீது இடி தாக்கியுள்ளது.இதில் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த 24 வயதுடைய முனியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அவரது வயிறு, வலது விலா எலும்புப் பகுதி மற்றும் வலது தொடை ஆகிய இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்தச் சம்பவத்தில் அவருடன் உறங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து (34) மற்றும் சுனில் (45) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.எனினும், காயமடைந்த இருவரும் தற்போது இயல்பான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement