• Oct 20 2026

இருவர் அமர்ந்து வானில் பறக்கலாம் – இலங்கைக்கு வந்துள்ள புதிய தொழில்நுட்பம் என்ன?

Chithra / Oct 19th 2026, 11:12 am
image


இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.


இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் முதலாவது சோதனைப் பறப்பை இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுக நகரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த ட்ரோனில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன், தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை வானில் பறக்கும் திறனையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், EHang நிறுவனம் முன்னெடுத்து வரும் ‘Global Fast Track Program’ திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைத்துள்ளது.


இதற்கமைய, இலங்கையில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களின் பிரதான செயற்பாட்டு மையமாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சிகிரியா, பிடுரங்கல மற்றும் அவற்றைச் சூழவுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக ட்ரோன் மூலம் வான்வழிப் பயண சேவைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருவர் அமர்ந்து வானில் பறக்கலாம் – இலங்கைக்கு வந்துள்ள புதிய தொழில்நுட்பம் என்ன இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் முதலாவது சோதனைப் பறப்பை இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுக நகரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ட்ரோனில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன், தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை வானில் பறக்கும் திறனையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், EHang நிறுவனம் முன்னெடுத்து வரும் ‘Global Fast Track Program’ திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைத்துள்ளது.இதற்கமைய, இலங்கையில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களின் பிரதான செயற்பாட்டு மையமாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சிகிரியா, பிடுரங்கல மற்றும் அவற்றைச் சூழவுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக ட்ரோன் மூலம் வான்வழிப் பயண சேவைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement