• Oct 27 2026

அனோஜனைத் தேடி சிறைக்கு சென்ற இலங்கைத் தூதுவர்! அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன?

Chithra / Oct 27th 2026, 10:13 am
image


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தண்டனை இரத்து செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான அனோஜன் சிவராசாவைச் சந்திப்பதற்காக இலங்கைத் தூதுவர் நேரடியாகச் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.


சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை, அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் நேற்று (26) நேரில் சந்தித்துள்ளார்.


அனோஜன் சிவராசாவுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அனோஜன் சிவராசாவின் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இலங்கைத் தூதுவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.


இதன்போது, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் அனோஜன் சிவராசாவுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


குறிப்பாக, எதிர்வரும் வழக்கு விசாரணைகளில் தேவையான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் நடைமுறையிலுள்ள சட்டப் பொறிமுறைகளுக்கு அமைவாகச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் குழு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியத்தையும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.


அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


அதேவேளை, சவூதி அரேபிய நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் அந்நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளித்து, எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.


மேலும், அனோஜன் சிவராசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரது நலனில் அக்கறை செலுத்தியமைக்கும், இலங்கைத் தூதரகத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.


அனோஜனைத் தேடி சிறைக்கு சென்ற இலங்கைத் தூதுவர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தண்டனை இரத்து செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான அனோஜன் சிவராசாவைச் சந்திப்பதற்காக இலங்கைத் தூதுவர் நேரடியாகச் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை, அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் நேற்று (26) நேரில் சந்தித்துள்ளார்.அனோஜன் சிவராசாவுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அனோஜன் சிவராசாவின் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இலங்கைத் தூதுவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.இதன்போது, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் அனோஜன் சிவராசாவுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.குறிப்பாக, எதிர்வரும் வழக்கு விசாரணைகளில் தேவையான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் நடைமுறையிலுள்ள சட்டப் பொறிமுறைகளுக்கு அமைவாகச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் குழு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியத்தையும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.அதேவேளை, சவூதி அரேபிய நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் அந்நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளித்து, எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.மேலும், அனோஜன் சிவராசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரது நலனில் அக்கறை செலுத்தியமைக்கும், இலங்கைத் தூதரகத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement