• Jul 26 2026

அமெரிக்காவின் சுங்க வரி குறைப்புக்கு ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை குழுவுமே காரணம் – மஹிந்த சமரசிங்க

Chithra / Jul 24th 2026, 1:54 pm
image


இலங்கை ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை அரசாங்கம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் இந்த சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா – இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள், ஜனாதிபதியின் சரியான நேரத்திலான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவை இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.


மேலும், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் கடின உழைப்பு, தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், தகவல் சேகரிப்பு, ஆலோசனைகள் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் இந்த முடிவுக்கு பங்களித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


கட்டாய உழைப்பு முறையைத் தடுப்பதில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்கா சுமார் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் இறக்குமதிகளுக்கு புதிய வரிகளை அறிவித்துள்ளது.


இதன் கீழ் 10 முதல் 12.5 சதவீதம் வரையான வரிகள் விதிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய பொருளாதார நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.


எனினும் 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.


ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் சுங்க வரி குறைப்புக்கு ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை குழுவுமே காரணம் – மஹிந்த சமரசிங்க இலங்கை ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் இந்த சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா – இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள், ஜனாதிபதியின் சரியான நேரத்திலான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவை இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.மேலும், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் கடின உழைப்பு, தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், தகவல் சேகரிப்பு, ஆலோசனைகள் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் இந்த முடிவுக்கு பங்களித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.கட்டாய உழைப்பு முறையைத் தடுப்பதில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்கா சுமார் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் இறக்குமதிகளுக்கு புதிய வரிகளை அறிவித்துள்ளது.இதன் கீழ் 10 முதல் 12.5 சதவீதம் வரையான வரிகள் விதிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய பொருளாதார நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.எனினும் 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement