இலங்கை அரசு, எல்லைதாண்டும் இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களின் இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டம் காரணமாக பண்ணை சுற்றுவட்டத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் இழுவை படகுகளை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கில் மீனவ அமைப்புள்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தபோதும் அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமையால் தமது கடல் வளங்கள் அபகரிக்கப்படுவதாகவும்,
தமது பொருளாதாரதம் முடக்கப்படுவதாகவும் தெரிவித்து தமக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனக் கோரி பாரிய போராட்டத்தை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.
தொடரும் இந்திய மீனவர்களின் அட்டகாசத்தால் பொருளாதாரம் பாதிப்பு; யாழில் வெடித்த பாரிய போராட்டம் இலங்கை அரசு, எல்லைதாண்டும் இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களின் இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டம் காரணமாக பண்ணை சுற்றுவட்டத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் இழுவை படகுகளை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கில் மீனவ அமைப்புள்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தபோதும் அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமையால் தமது கடல் வளங்கள் அபகரிக்கப்படுவதாகவும், தமது பொருளாதாரதம் முடக்கப்படுவதாகவும் தெரிவித்து தமக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனக் கோரி பாரிய போராட்டத்தை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.