• May 24 2026

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலம்

Chithra / May 24th 2026, 4:24 pm
image

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (24) காலை திருப்பலி அருட்தந்தை டொமினிக் தலைமையில்  நடைபெற்றது.


நுவரெலியா பிளாக்பூல் நம் மாதா உயர்நிலை கல்லூரியின் அதிபரான அருட்தந்தை சிவந்த ரொட்ரிக்கோ அடிகளார் விசேடமாக திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.


இன்றைய திருவிழாவை முன்னிட்டு காலை 9.45 மணியளவில் திருவிழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் மற்றும் அதிதிகளுக்கான வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.


திருப்பலியைத் தொடர்ந்து, புனித சூசையப்பர் திருச்சுருப பவணி ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட புனித சூசையப்பர் திருச்சுருபம் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக நகரின் பிரதான வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.


பவணி, பொலிஸ் நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் வரையிலும் சென்று, பின்னர் இரண்டாம் வீதி மற்றும் ஆலய வீதி வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தது.


 மேலும், திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலம் மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (24) காலை திருப்பலி அருட்தந்தை டொமினிக் தலைமையில்  நடைபெற்றது.நுவரெலியா பிளாக்பூல் நம் மாதா உயர்நிலை கல்லூரியின் அதிபரான அருட்தந்தை சிவந்த ரொட்ரிக்கோ அடிகளார் விசேடமாக திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.இன்றைய திருவிழாவை முன்னிட்டு காலை 9.45 மணியளவில் திருவிழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் மற்றும் அதிதிகளுக்கான வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.திருப்பலியைத் தொடர்ந்து, புனித சூசையப்பர் திருச்சுருப பவணி ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட புனித சூசையப்பர் திருச்சுருபம் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக நகரின் பிரதான வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.பவணி, பொலிஸ் நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் வரையிலும் சென்று, பின்னர் இரண்டாம் வீதி மற்றும் ஆலய வீதி வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தது. மேலும், திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement