• Apr 29 2026

யாழில் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது!

Chithra / Apr 28th 2026, 8:52 pm
image

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement