• Jun 14 2026

மோசமடையும் சுரேஷ் சலேயின் உடல்நிலை - 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Chithra / Jun 14th 2026, 2:14 pm
image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’, ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவுக்கு கடிதம்  அனுப்பியுள்ளது.


சுரேஷ் சலேவின் சுகாதார நிலை மோசமடைந்து வருவது குறித்து 'சர்வஜன அதிகாரம்' கட்சி தனது பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான இராணுவ வீரராக அவர் ஆற்றிய தனித்துவமான சேவையை பாராட்டுவதுடன், தேசத்திற்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 


தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு வீரருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது தங்களது கட்சியின் நம்பிக்கை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, தாமதமின்றி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வஜன அதிகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மோசமடையும் சுரேஷ் சலேயின் உடல்நிலை - 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதிக்கு அவசர கடிதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’, ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவுக்கு கடிதம்  அனுப்பியுள்ளது.சுரேஷ் சலேவின் சுகாதார நிலை மோசமடைந்து வருவது குறித்து 'சர்வஜன அதிகாரம்' கட்சி தனது பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான இராணுவ வீரராக அவர் ஆற்றிய தனித்துவமான சேவையை பாராட்டுவதுடன், தேசத்திற்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு வீரருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது தங்களது கட்சியின் நம்பிக்கை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, தாமதமின்றி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வஜன அதிகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement