சீனாவின் திபெத் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
திபெத் பிராந்தியத்தில் நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாக்சு (Nagqu) பிராந்தியத்தின் உயரமான மலைப்பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீற்றர் பகுதிக்குள் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,864 மீற்றர் உயரம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனவரிக்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கம் இதுவென சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் தெளிவாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 339 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் முழுமையான விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக விசேட மீட்புக் குழுக்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஊடாகச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு அண்டை மாகாணமான கிங்காயில் (Qinghai), யுஷு (Yushu) பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 2,698 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 300 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குலுங்கிய பூமி. சரிந்த கட்டடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 16 பேரைப் பலிகொண்ட பேரழிவு சீனாவின் திபெத் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.திபெத் பிராந்தியத்தில் நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாக்சு (Nagqu) பிராந்தியத்தின் உயரமான மலைப்பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீற்றர் பகுதிக்குள் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,864 மீற்றர் உயரம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.2024 ஜனவரிக்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கம் இதுவென சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் தெளிவாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 339 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் முழுமையான விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக விசேட மீட்புக் குழுக்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஊடாகச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு அண்டை மாகாணமான கிங்காயில் (Qinghai), யுஷு (Yushu) பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 2,698 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 300 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.