மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு :-
"நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள மோதலால் அவர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு 'மூச்சு' தரும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
ரணசிங்க பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.
பிள்ளைகளுக்குச் சரியான கல்வியுடன், அறநெறிப் பண்புகளையும் சமச்சீரான உணவையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இன்று 120 ரூபாவைக் கூட வழங்கவில்லை.
80 ரூபாவுக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கான தீர்வை வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனப் பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் வறுமை அதிகரித்துள்ள சூழலில், அரசு நிலக்கரி இறக்குமதியிலும் முறைகேடுகளைச் செய்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டம் குறித்துப் போதிய தெளிவில்லாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார்.
தொழிலாளர்களைப் பாதுகாக்க அநுர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-சஜித் வலியுறுத்து மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு :-"நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள மோதலால் அவர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு 'மூச்சு' தரும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.ரணசிங்க பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.பிள்ளைகளுக்குச் சரியான கல்வியுடன், அறநெறிப் பண்புகளையும் சமச்சீரான உணவையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இன்று 120 ரூபாவைக் கூட வழங்கவில்லை.80 ரூபாவுக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கான தீர்வை வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனப் பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கூறுகின்றனர்.இலங்கையில் வறுமை அதிகரித்துள்ள சூழலில், அரசு நிலக்கரி இறக்குமதியிலும் முறைகேடுகளைச் செய்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டம் குறித்துப் போதிய தெளிவில்லாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார்.