இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை, இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்வரும் நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையை அண்மித்தவாறு வடக்கு நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 1 மணி முதல் நாளை (12) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும்.
குறிப்பாக, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் விரைவாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கனமழையால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தானியங்கி முறையில் திறக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மறுபுறம், மண்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ள போதிலும், கடுகன்னாவ பகுதியில் மேலும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
அத்துடன், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சீரற்ற காலநிலை தொடர்வதால், பொதுமக்கள், சாரதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணிப்போர் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீண்டும் பாறைகள் சரியும் அபாயம் - இலங்கைக்கு அம்பர் எச்சரிக்கை - பல மாவட்டங்களுக்கு ஆபத்து இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை, இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் கிழக்குப் பகுதியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்வரும் நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையை அண்மித்தவாறு வடக்கு நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 1 மணி முதல் நாளை (12) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும்.குறிப்பாக, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் விரைவாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கனமழையால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தானியங்கி முறையில் திறக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மறுபுறம், மண்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ள போதிலும், கடுகன்னாவ பகுதியில் மேலும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.அத்துடன், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, சீரற்ற காலநிலை தொடர்வதால், பொதுமக்கள், சாரதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணிப்போர் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.