• Apr 28 2026

கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு சென்று குறைபாடுகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!

shanu / Mar 16th 2026, 3:32 pm
image


முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.


அந்தவைகையில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரோடு கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.


இந்நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களை அகற்றுதல், பாடசாலைக்கான பாதுகாப்ப வேலி அமைத்தல், 08குப்பறைக் கட்டடங்கள் தேவை, சீரான மலசலகூட வசதியை ஏறபடுத்துதல், மிதிவண்டி தரிப்பிடம் அமைத்தல், பாடசாலைக்கான போக்குவரத்துச் சீரின்மை, விளையாட்டு உபகரணங்கள் தேவை, வகுப்பறைகளுக்கான தளபாட பற்றாக்குறைகள் உள்ளிட்ட குறைபாடுகளும், கோரிக்கைகளும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கெண்டுவரப்பட்டன.


இந்நிலையில் கோரிகைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தம்மிடம் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் கோரிக்கைள் தொடர்பில் தம்மால் உரியவகையில் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு சென்று குறைபாடுகளை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.அந்தவைகையில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரோடு கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.இந்நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களை அகற்றுதல், பாடசாலைக்கான பாதுகாப்ப வேலி அமைத்தல், 08குப்பறைக் கட்டடங்கள் தேவை, சீரான மலசலகூட வசதியை ஏறபடுத்துதல், மிதிவண்டி தரிப்பிடம் அமைத்தல், பாடசாலைக்கான போக்குவரத்துச் சீரின்மை, விளையாட்டு உபகரணங்கள் தேவை, வகுப்பறைகளுக்கான தளபாட பற்றாக்குறைகள் உள்ளிட்ட குறைபாடுகளும், கோரிக்கைகளும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கெண்டுவரப்பட்டன.இந்நிலையில் கோரிகைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தம்மிடம் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் கோரிக்கைள் தொடர்பில் தம்மால் உரியவகையில் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement