நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (05) மற்றும் நேற்று(06) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கண்காணிப்பு கெமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் கைதிகளால் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலையின் செயற்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
வன்முறைக்கு காரணமான சில கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நேற்று கூடிய அமைச்சரவை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இக்குழுவை நியமித்துள்ளது.
சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு - குற்றத்தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் (05) மற்றும் நேற்று(06) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிறைச்சாலையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கண்காணிப்பு கெமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் கைதிகளால் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.சிறைச்சாலையின் செயற்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.வன்முறைக்கு காரணமான சில கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நேற்று கூடிய அமைச்சரவை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இக்குழுவை நியமித்துள்ளது.