நாட்டில் தொடரும் பலத்த மழைக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான பகுதிகளில் பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் தாக்கத்தால் பல பகுதிகளில் ஏற்கனவே மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சில இடங்களில் பாறைகளும் மண் அடுக்குகளும் தற்போதைய மழையினால் சரிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இதுவரை 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நோர்வுட் பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் குருவிட்ட பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
தற்போது மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் தாக்கத்தால் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மழையின் தீவிரத்திற்கு ஏற்ப எச்சரிக்கைகள் மாற்றமடையக்கூடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட இடங்கள் ஆபத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறவும் நாட்டில் தொடரும் பலத்த மழைக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான பகுதிகளில் பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் தாக்கத்தால் பல பகுதிகளில் ஏற்கனவே மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, சில இடங்களில் பாறைகளும் மண் அடுக்குகளும் தற்போதைய மழையினால் சரிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.மேலும், ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இதுவரை 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.இதற்கிடையில் கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நோர்வுட் பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் குருவிட்ட பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.தற்போது மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் தாக்கத்தால் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மழையின் தீவிரத்திற்கு ஏற்ப எச்சரிக்கைகள் மாற்றமடையக்கூடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.