• Oct 14 2026

நாமல் - யோஷித சகோதரர்களைச் சுற்றி தொடரும் சட்டச் சிக்கல்கள்!

Chithra / Oct 13th 2026, 1:52 pm
image


ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தொடர்பான வழக்குகளில் கொழும்பு நீதிமன்றங்கள் இன்று பிறப்பித்த உத்தரவுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் இன்று (13) நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


எயார்பஸ் விமானக் கொள்முதலில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்று காலை சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.


இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


அதேநேரம் எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.


யோஷித ராஜபக்ஷவுக்கு பிரித்தானியாவில் கடற்படைப் பயிற்சி பெற முறையற்ற ஏற்பாடுகளைச் செய்து, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இதன் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, நாமல் ராஜபக்ஷவின் வழக்கு 27ஆம் திகதியும், யோஷித ராஜபக்ஷவின் வழக்கு 29ஆம் திகதியும் மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாமல் - யோஷித சகோதரர்களைச் சுற்றி தொடரும் சட்டச் சிக்கல்கள் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தொடர்பான வழக்குகளில் கொழும்பு நீதிமன்றங்கள் இன்று பிறப்பித்த உத்தரவுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் இன்று (13) நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டன.எயார்பஸ் விமானக் கொள்முதலில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்று காலை சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.அதேநேரம் எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.யோஷித ராஜபக்ஷவுக்கு பிரித்தானியாவில் கடற்படைப் பயிற்சி பெற முறையற்ற ஏற்பாடுகளைச் செய்து, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, நாமல் ராஜபக்ஷவின் வழக்கு 27ஆம் திகதியும், யோஷித ராஜபக்ஷவின் வழக்கு 29ஆம் திகதியும் மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement