இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வனப்பகுதிக்கு அருகில் வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா மாவட்டத்தின் துனி கிராமப்புற மண்டலத்தைச் சேர்ந்த மாந்தோப்புக் காவலாளியான சுங்கரா கணேஷ் மற்றும் பவானி தம்பதியரின் மூத்த மகளான ஞானேஸ்வரி கடந்த 6ஆம் திகதி தந்தையுடன் அருகிலுள்ள மாந்தோப்பிற்கு சென்றிருந்தார். அவர்களது வளர்ப்பு நாயும் உடன் சென்றிருந்தது.
அங்கு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வளர்ப்பு நாய் மட்டும் வீடு திரும்பிய நிலையில், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய நாய் தொடர்ந்து விசித்திரமாக குரைத்ததுடன், அருகில் வருபவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் யாரோ நாயை தாக்கி விரட்டிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பின்னர் கால்நடை மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு நாயின் உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, அதற்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தி சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
நாய் வீட்டிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வனப்பகுதிக்குச் சென்றது. எனினும் அங்கு மற்ற விலங்குகளின் தாக்குதலால் நாய் காயமடைந்து பின்னர் பொலிஸார் அதனை மீட்டு மீண்டும் சிகிச்சை அளித்த போதிலும், பலனின்றி அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து மாவட்ட பொலிஸ் அதிகாரி பிந்துமாதவ் தெரிவித்ததாவது,
சிறுமி காணாமல் போன பகுதியிலுள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் பலமுறை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த வனப்பகுதியில் மலைப்பாம்புகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமுள்ளதால், அவை குழந்தையைத் தாக்கியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என கூறினார்.
சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வனத்துறையினர் மற்றும் சுமார் 400 பொலிஸார் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுமியின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் நடந்த மர்மம்; 11 நாட்களாகியும் கிடைக்காத குழந்தை தேடியபடி உயிரிழந்த வளர்ப்பு நாய் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வனப்பகுதிக்கு அருகில் வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காக்கிநாடா மாவட்டத்தின் துனி கிராமப்புற மண்டலத்தைச் சேர்ந்த மாந்தோப்புக் காவலாளியான சுங்கரா கணேஷ் மற்றும் பவானி தம்பதியரின் மூத்த மகளான ஞானேஸ்வரி கடந்த 6ஆம் திகதி தந்தையுடன் அருகிலுள்ள மாந்தோப்பிற்கு சென்றிருந்தார். அவர்களது வளர்ப்பு நாயும் உடன் சென்றிருந்தது.அங்கு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வளர்ப்பு நாய் மட்டும் வீடு திரும்பிய நிலையில், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.சம்பவத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய நாய் தொடர்ந்து விசித்திரமாக குரைத்ததுடன், அருகில் வருபவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் யாரோ நாயை தாக்கி விரட்டிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.பின்னர் கால்நடை மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு நாயின் உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, அதற்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தி சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். நாய் வீட்டிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வனப்பகுதிக்குச் சென்றது. எனினும் அங்கு மற்ற விலங்குகளின் தாக்குதலால் நாய் காயமடைந்து பின்னர் பொலிஸார் அதனை மீட்டு மீண்டும் சிகிச்சை அளித்த போதிலும், பலனின்றி அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.இதுகுறித்து மாவட்ட பொலிஸ் அதிகாரி பிந்துமாதவ் தெரிவித்ததாவது, சிறுமி காணாமல் போன பகுதியிலுள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் பலமுறை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த வனப்பகுதியில் மலைப்பாம்புகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமுள்ளதால், அவை குழந்தையைத் தாக்கியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என கூறினார்.சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வனத்துறையினர் மற்றும் சுமார் 400 பொலிஸார் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுமியின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.