வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலை அதிகாரிகளின் மருத்துவப் பரிந்துரைகளின் பேரில் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ இதற்கு முன், ஒக்டோபர் 9 அன்று சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைக் காவலுக்கு மாற்றப்பட்டார்.
கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, ஒக்டோபர் 8 அன்று அவர் சிறை மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியக் கணக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினரால் (FCID) தான் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை குறித்து சில சாதாரண மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அவர் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவின் கீழ் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தடுத்து பரபரப்பு - ஷிரந்தியும் வைத்தியசாலையில் அனுமதி வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறைச்சாலை வைத்தியசாலை அதிகாரிகளின் மருத்துவப் பரிந்துரைகளின் பேரில் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.ஷிரந்தி ராஜபக்ஷ இதற்கு முன், ஒக்டோபர் 9 அன்று சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைக் காவலுக்கு மாற்றப்பட்டார்.கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, ஒக்டோபர் 8 அன்று அவர் சிறை மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியக் கணக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினரால் (FCID) தான் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை குறித்து சில சாதாரண மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அவர் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவின் கீழ் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.