• Jun 07 2026

மீகொடை விபத்து வழக்கு... தலைமறைவாக இருந்த இருவர் கைது

Aathira / Jun 6th 2026, 11:41 am
image

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் உரிமையாளர் மற்றும் மற்றொருவர் என இருவர் மீது தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று (6) காலை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மீகொடை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீகொடை விபத்து வழக்கு. தலைமறைவாக இருந்த இருவர் கைது மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் உரிமையாளர் மற்றும் மற்றொருவர் என இருவர் மீது தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று (6) காலை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மீகொடை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement