• Jul 21 2026

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா! புதிய விதிமுறை அமல்

Tax
Chithra / Jul 20th 2026, 1:11 pm
image


இந்தியாவும் இலங்கையும் இடையே நடைமுறையில் உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) இந்தியா முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.


அதன்படி, 'முக்கிய நோக்கம் சோதனை' (Principal Purpose Test - PPT) என்ற புதிய மற்றும் கடுமையான விதிமுறை நேற்று (19) முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.


இந்த புதிய ஏற்பாட்டின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி தீவிரமாக மதிப்பீடு செய்யவுள்ளனர். 


குறிப்பாக, வரிச் சலுகைகளைப் பெறும் நோக்கில் மட்டுமே நிறுவனங்கள் அல்லது முதலீட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, வரி ஏய்ப்பைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.


இந்திய நிதியமைச்சு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம், கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானங்களுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய PPT விதிமுறையின்படி, சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படாது. நிறுவனங்கள் தங்களது ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியிருக்கும்.


ஒரு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வரிச் சலுகையைப் பெறுவதாக வரி அதிகாரிகள் கருதினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளை மறுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதனால், இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலீடு செய்யும் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களது குறுக்கு-எல்லை முதலீட்டு ஏற்பாடுகளுக்கு தெளிவான வணிக நோக்கங்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், அதற்கான ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


மேலும், 'முக்கிய நோக்கம்' தொடர்பான மதிப்பீட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்து இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் அதிகார சபை (CBDT) வெளியிடும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா புதிய விதிமுறை அமல் இந்தியாவும் இலங்கையும் இடையே நடைமுறையில் உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) இந்தியா முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.அதன்படி, 'முக்கிய நோக்கம் சோதனை' (Principal Purpose Test - PPT) என்ற புதிய மற்றும் கடுமையான விதிமுறை நேற்று (19) முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.இந்த புதிய ஏற்பாட்டின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி தீவிரமாக மதிப்பீடு செய்யவுள்ளனர். குறிப்பாக, வரிச் சலுகைகளைப் பெறும் நோக்கில் மட்டுமே நிறுவனங்கள் அல்லது முதலீட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, வரி ஏய்ப்பைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.இந்திய நிதியமைச்சு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம், கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானங்களுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய PPT விதிமுறையின்படி, சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படாது. நிறுவனங்கள் தங்களது ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியிருக்கும்.ஒரு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வரிச் சலுகையைப் பெறுவதாக வரி அதிகாரிகள் கருதினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளை மறுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனால், இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலீடு செய்யும் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களது குறுக்கு-எல்லை முதலீட்டு ஏற்பாடுகளுக்கு தெளிவான வணிக நோக்கங்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், அதற்கான ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மேலும், 'முக்கிய நோக்கம்' தொடர்பான மதிப்பீட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்து இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் அதிகார சபை (CBDT) வெளியிடும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement